வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 ஜூன் 2018 (09:02 IST)

நீட் தேர்வின்போது தந்தையை இழந்த மாணவர்களின் மீளாத சோகம்

நீட் தேர்வு நடந்த தினத்தில் தந்தையை இழந்த மாணவர் மற்றும் மாணவி தேர்வில் தோல்வி அடைந்திருபதால் அவர்களை சோகம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது
 
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் இந்த ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கேரளாவுக்கு தந்தையுடன் சென்று நீட் தேர்வு எழுதிய கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவரின் தந்தை அவர் தேர்வு எழுதி கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார். இவர் நீட் தேர்வில் 84 மதிப்பெண்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
 
அதேபோல் மதுரையில் தந்தையுடன் சென்று நீட் தேர்வை எழுதிய ஐஸ்வர்யா என்ற மாணவி தேர்வு எழுதி முடித்தவுடன் தந்தையிடம் தேர்வு கடினமாக இருந்ததாக கூறினார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவரது தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த நிலையில் மாணவி ஐஸ்வர்யா நீட் தேர்வில் 92 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளதால் டாக்டர் படிப்பு படிக்கும் வாய்ப்பை இழந்தார்.
 
நீட் தேர்வு தினத்தன்று தந்தையை இழந்த மாணவர் மற்றும் மாணவி நீட் தேர்விலும் தோல்வி அடைந்ததால் அவரகள் மீளா சோகத்தில் உள்ளனர்.