வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 5 மே 2018 (10:53 IST)

ஜனாதிபதியிடம் விருது பெறமுடியாதது ஏமாற்றம் - பார்வதி

தேசிய விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெறமுடியாதது ஏமாற்றம் அளிப்பதாக நடிகை பார்வதி கூறியுள்ளார்
சமீபத்தில் 65வது தேசிய விருது அறிவிக்கப்பட்டது. தமிழில் டூ லெட், பாகுபலி, மலையாள நடிகை பார்வதி, மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்ட பலருக்கும் விருது அறிவிக்கப்பட்டது. 
 
பொதுவாக தேசிய விருதை ஜனாதிபதிதான் கொடுப்பார். ஆனால், இந்த முறை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 11 பேருக்கு மட்டுமே கொடுப்பார். மற்றவர்களுக்கு அமைச்சர் ஸ்மிருதி இராணி அளிப்பார் என அறிவிக்கப்பட்டது. இதனால் 70-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
 
இந்நிலையில் நடிகை பார்வதி ‘டேக் ஆப்’ என்ற மலையாள படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இதுபற்றி பேசிய பார்வதி தேசிய விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெறமுடியாதது ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.