1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By சுரேஷ் வெங்கடாசலம்
Last Updated : வெள்ளி, 11 மார்ச் 2016 (10:20 IST)

தேமுதிக தனித்து போட்டியிடும் என்ற விஜயகாந்தின் அறிவிப்பு அதிமுகவிற்கு சாதகமாக அமையுமா?

விஜயகாந்தின் கூட்டணி அறிவிப்பு குறித்து தமிழக மக்கள் ஆவலாக எதிர்பார்த்து வந்த நிலையில், நேற்று நடந்த அக்கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் அதற்கான அறிவிப்பு வெளியானது.


 

 
முன்னதாக, விஜயகாந்த் திமுக கூட்டணிக்குச் செல்வது உறுதியானதாக சொல்லப்பட்டு வந்தது. பாஜக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. மக்கள் நல கூட்டணியினர் தங்கள் கூட்டணிகு விஜயகாந்த் வருவார் என்று நம்பிக்கை தெரிவித்து வந்தது.
 
இந்நிலையில், தேமுதிக மகளிர் மணி மாநாட்டிற்கு  தலைமை தாங்கிய விஜயகாந்த், “கூட்டணி குறித்து எந்த கட்சியுடனும் நான் பேரம் பேசவில்லை. பத்திரிக்கைகள்தான் அவ்வாறு பேசியும், எழுதியும் வந்தன.
 
எனக்கு யாரும் பாடம் சொல்லிக்கொடுக்க தேவையில்லை. பத்திரிக்கை நண்பர்களை தரக்குறைவாக சொல்லவில்லை. பொதுவாக சொல்கிறேன்.
 
கூட்டணி குறித்து எனக்கு எந்த குழப்பமும் கிடையாது. நான் தெளிவாகத்தான் இருக்கிறேன். என்னை கூட்டணிக்கு அழைத்த அனைத்துக் கட்சிகளுக்கும் எனது நன்றியைத்தான் தெரிவித்துக் கொண்டிருந்தேன். கூட்டணி குறித்து சொல்லவில்லை.
 
வருகின்ற தேர்தலில் விஜயகாந்த் தனியாக சந்திக்கப் போகிறேன் என்று தெளிவாகச் சொல்கிறேன். நேர்காணலின்போது இதையேதான் நிர்வாகிகளும் சொன்னார்கள்.
 
காஞ்சிபுரம் மாநாட்டில் நான் கிங்காக இருக்க வேண்டுமா? அல்லது கிங் மேக்கராக இருக்க வேண்டுமா? என்று உங்களிடம் கேட்டபோது, நீங்கள் கிங்காக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்கள்.
 
அதனால்தான், விஜயகாந்த் இந்த தேர்தலில் தனியாகத்தான் போட்டியிடப் போகிறேன் என்பதை மீண்டும் மீண்டும் உறுதியாக சொல்கிறேன். எனக்கு எந்த பயமும் கிடையாது” என்று கூறியுள்ளார். 
 
விஜயகாந்தின் இந்த அறிவிப்பு திமுகவிற்க பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்ற. ஆனால் விஜயகாந்தின் இந்த முடிவால் திமுகவிற்கு பாதிப்பு இல்லை என்றும் கூறப்படுகின்றது.
 
விஜயகாந்தின் இந்த முடிவு குறித்து கருத்து கூறியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக என்றால் தில்துமுல்லு, அதிமுக என்றால் அனைத்திலும் தில்லுமுல்லு என்றும் இந்த இரண்டு கட்சிகளையும் விரட்டியடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இந்நிலையில், விஜயகாந்தின் இந்த முடிவு சட்டமன்ற தேர்ததில் அதிமுகவிற்கு சாதகமாக அமையும் என்றும் கூறப்படுகின்றது என்பது குறிப்பிபடத்தக்கது.