திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 25 ஏப்ரல் 2016 (05:16 IST)

சென்னை அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ 5 கோடி பணம் பறிமுதல்

சென்னை அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ 5 கோடி பணம் பறிமுதல்

சென்னையில் உள்ள அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ 5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 

 
தஞ்சை மாவட்ட  எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் விஜய கிருஷ்ணசாமி, சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
 
இந்த நிலையில், விஜய கிருஷ்ணசாமி வீட்டில், வாக்காளர்களக்கு பணம் வினியோகம் செய்ய ரூ 5 அளவில் கோடி கணக்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் ஆணையம் மற்று காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
இதனையடுத்து, தேர்தல் அலுவலர் சங்கீதா மற்றும் வருமான துறை இணை இயக்குனர் சஞ்சய் ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் விஜய கிருஷ்ணசாமி வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, யாரும் எதிர்பாரத வகையில், சுமார் 4 கோடியே 80 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக பிரமுகர்கள் வீட்டில் தொடர்ந்து கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவது அரசியல் கட்சிகளையும், பொது மக்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 

ய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்