செவ்வாய், 6 ஜூன் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Updated: வியாழன், 5 மே 2016 (03:11 IST)

கருத்துக் கணிப்பு - இது நாங்க இல்லை. அஇது வேற: சொல்வது தினமலர்

கருத்துக் கணிப்பு - இது நாங்க இல்லை. அஇது வேற: சொல்வது தினமலர்

இந்த கருத்துக் கணிப்புக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தினமலர் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுக்க உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றிபெறப் போகும் வேட்பாளர் யார் என்பது குறித்து, நியூஸ் 7 தொலைக்காட்சி மற்றம் தினமலர் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.
 
இந்த கருத்துக்கணிப்பு தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்பட்டுள்ளது. இதனால், அதிமுக, பாமக, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளது.
 
இந்த நிலையில், இந்த கருத்துக் கணிப்புக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும்  இல்லை என ஈரோடு மற்றும் சேலம் தினமலர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை அவர்களது சார்பில் வெளிவரும் தினமலர் நாளிதழில் அறிவித்துள்ளார்.