திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel

ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்ய ஜி.கே.மணி கோரிக்கை

ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்ய ஜி.கே.மணி கோரிக்கை

முதல்வர் ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக தலைவர் ஜி.கே.மணி தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அதில், மிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவரது தேர்தல் பரப்புரை கூட்டங்களில் அடிப்படை வசதிகள் கூட இன்றி பொது மக்கள் அடைத்து வைக்கப்படுகின்றனர். இந்த கூட்டங்களில் பங்கேற்ற தொண்டர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
குறிப்பாக, கடலூர் மாவட்டம் விருத்தாசலம், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஆகிய இடங்களில் நடைபெற்ற அதிமுக பரப்புரைக் கூட்டங்களில் வெப்பம் மற்றும் நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தது குறித்து ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.