1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 19 மே 2016 (16:59 IST)

முதல்வர் ஜெயலலிதா தொகுதியில் வேகம் எடுத்த நோட்டா

முதல்வர் ஜெயலலிதா தொகுதியில் வேகம் எடுத்த நோட்டா

தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதி தொகுதியில் நோட்டாவுக்கு 2,630 வாக்குகள் பதிவாகியுள்ளது.
 

 
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதி. திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிட்டார். மேலும் பல கட்சி சார்பிலும், சுயேட்சையாகவும் பலர் போட்டியிட்டனர்.
 
தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்கும் போது, எந்த கட்சிக்கும் வாக்களிக்கபிடிக்கவில்லை என்றாலும் சரி அல்லது சுயேட்சை வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றாலும் சரி அவர்கள் தங்களது வாக்கை வேஸ்ட் ஆக்காமல் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதி தொகுதியில் நோட்டாவுக்கு 2,630 வாக்குகள் பதிவாகியுள்ளது. இது அதிக அளவு வாக்குகளாக பார்க்கப்படுகிறது. நோட்டாவுக்கு வாக்களித்தவர்கள் படித்தவர்கள் என்றும் நடுநிலையாளர்கள் என்றும் கூறப்படுகிறது.