1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 19 மே 2016 (11:55 IST)

கோபாலபுரத்தில் ருத்திரதாண்டவம் ஆடிய கருணாநிதி

கோபாலபுரத்தில் ருத்திரதாண்டவம் ஆடிய கருணாநிதி

தமிழக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி கடும் விரக்தியில், முக்கிய நிர்வாகிகளை அழைத்து காய்ச்சி எடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

 
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் காலை முதல் வாக்குப்பதிவு முடிவுகள் வெளியானது. இதனால், திமுக தலைவர் கருணாநிதி கடும் அதிர்ச்சியடைந்தார்.
 
தற்போது நிலவரப்படி அதிமுக முன்னிலை பெற்று வெற்றிப் பாதையில் செல்கிறது. இதற்கு அடுத்து, திமுக வந்து கொண்டுள்ளது. இருப்பினும், தமிழகம் முழுக்க திமுக தோல்வி முகத்தில் உள்ளது.
 
அப்போது, உடன் இருந்த திமுக நிர்வாகிகளிடம் “தமிழகத்தில் என்னய்யா நடக்குது? நான், அப்பேவே சொன்னேன், பலமான கூட்டணி வேணும்னு சொன்னேன், யார் கேட்டீங்க....” என்று கடும் கோபத்தை காட்டினாராம்.
 
மேலும், தோல்வி விரக்தியில் கருணாநிதி தனது  கோபத்தை காட்டினாராம். உடன் இருந்தவர்கள் அவரது கருத்தை ஆதரிக்கும் வகையில், ஆமாம்.. தலைவரே... என அவரது கோபத்தை தணிக்கும் வகையில் ஆறுதல் சொன்னார்களாம்.