வெள்ளி, 14 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 19 மே 2016 (12:08 IST)

திமுக-வை காய்ச்சி எடுத்த மு.க.அழகிரி வாரிசு

திமுக-வை காய்ச்சி எடுத்த மு.க.அழகிரி வாரிசு

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி, திமுக தோல்வி குறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார்.
 

 
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் காலை முதல் வாக்குப்பதிவு முடிவுகள் வெளியானது. தற்போது நிலவரப்படி அதிமுக முன்னிலை பெற்று வெற்றிப் பாதையில் செல்கிறது. இதற்கு அடுத்து, திமுக வந்து கொண்டுள்ளது. இருப்பினும், தமிழகம் முழுக்க திமுக தோல்வி முகத்தில் உள்ளது. இதனால், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுக முக்கியத் தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
 
இந்த நிலையில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி, திமுக தோல்வி குறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 16 நிமிடங்களுக்கு முன்பு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், மூத்தவன் சொல்லும், முத்தின நெல்லிக்காயும் புளிக்கத்தான் செய்யும். ஆனால், எதிர்காலத்திற்கு நல்லது என வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளார்.