வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பொ‌ன்மொ‌ழிக‌ள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2021 (00:32 IST)

புத்தரின் பொன்மொழிகள்

உண்மையே பேச வேண்டும். கோபத்தை தவிர்க்க வேண்டும். கைவசம் இருப்பது கொஞ்சமே ஆனாலும் இருப்பவர்களுக்கு ஈதல் வேண்டும். இவ்மூன்று செயல்களும் ஒருவனைத் தேவர்களிடம் அழைத்துச் செல்கின்றன.
 
* தலைமயிர் நரைத்து விட்டதனால் மட்டும் ஒருவர் முதிர்ச்சியடைந்த பெரியவர் ஆக இயலாது. அவ்வாறு அவர் அடைந்த முதிர்ச்சி பயனற்ற முதுமையாகும். மனதால் முதிர்ச்சியடைய வேண்டும்.
 
* புத்தரையும் தருமத்தையும் சங்கத்தையும் சரண் அடைந்தவன் மேன்மையான நான்கு வாய்மைகளைத் தனது தெளிந்த அறிவால் காண்கிறான்.
 
* துன்ப நீக்கத்திற்கான வழி, ஆசைகளை விட்டு விடுவதால் மட்டும் ஏற்பட்டுவிடாது. சொல், செயல், சிந்தனை இம்மூன்றிலும் உண்மை இருக்க வேண்டும். நேர்மை இருக்க வேண்டும். கொல்லாமை, அன்புடைமை, தூய அறிவுடைமை ஆகிய இந்த உயர்ந்த இயல்புகளையும் நிலையாகக் கொள்ள வேண்டும்.
 
* மனிதனாகப் பிறப்பது அரிது. மனிதனாக வாழ்வது அரிது. உயர்ந்த அறநெறிகளைக் கேட்பது அரிது.
 
* முற்றிலும் நிந்திக்கப்பட்டவனும், முற்றிலும் புகழப்பட்டவனும் ஒருக்காலும் இருந்ததில்லை. இருக்கப் போவதுமில்லை. இப்போதும் இல்லை.
 
* குழம்பின் சுவையினை அகப்பை அறிய முடியாதது போல, தமது வாழ்நாள் முழுவதும் அறிஞர்களோடு பழகினாலும், ஒரு மூடன் அறத்தின் இயல்புகளை அறிய மாட்டான்.
 
* மலத்தைத் தின்று உடலைப் பெரிதாக்கிக் கொள்ளும் பன்றியைப் போல, கொழுக்கப் பெரும் தீனி தின்ற சோம்பலிலும், தூக்கத்திலும் ஆழ்ந்து படுக்கையில் புரண்டு கொண்டு இருப்பவன் முட்டாள். இவன் மீண்டும் மீண்டும் பிறக்கிறான்.