ஏர்வேஸ் ஊழியரின் மோசமான நடத்தையால் டுவிட்டரில் பொங்கிய பிவி சிந்து
இண்டிகோ ஏர்வேஸ் நிறுவன ஊழியர் ஒருவர் தன்னிடம் மோசமாக நடந்துக்கொண்டதாக பிவி சிந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்று காலை பிரபல பூப்பந்து வீரர் பிவி சிந்து டெல்லியிலிருந்து மும்பை சென்றுள்ளார். அவர் சென்ற இண்டிகோ விமானத்தின் ஊழியர் ஒருவர் அவரை மிகவும் மோசமாக நடத்தியுள்ளார். இதனை சிந்து தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த ஊழியரின் பெயரை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
அஜிதேஷ் என்னிடம் மோசமாக நடந்துக்கொண்ட போது விமான பணிப்பெண் அஸிமா என்பவர் பயணிகளிடம் கடுமையாக நடந்துக்கொள்ள கூடாது என கூறினார். ஆனால் அஜிதேஷ் அஸிமாவிடமும் மோசமாக நடந்துக்கொண்டர். இரண்டாவது பதிவாக இதனை பதிவிட்டுள்ளார். பிவி சிந்து நடந்த சம்பவம் குறித்து விளக்கமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து இண்டிகோ நிறுவனம் நாங்கள் உங்களிடம் பேச விரும்புகிறோம் என டுவிட்டரில் சிந்துவிடம் தெரிவித்தது. ஆனால் சிந்து கோபமடைந்து, அங்கு என்ன நடந்தது என்பது எங்களுடன் இருந்த அஸிமா என்ற ஊழியருக்கு தெரியும். அவரிடம் கேளுங்கள். அவர் உங்களுக்கு விளக்குவார் என பதிலுக்கு பதிவிட்டுள்ளார்.
இண்டிகோ நிறுவனம் பிரச்சனை குறித்து நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்து இருந்தால். சிந்து அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி இருப்பார். ஆனால் அவர்களோ பேச்சு வார்த்தனை நடத்த அழைப்பு விடுத்தனர். இதனால் சிந்து பொங்கி எழுந்துவிட்டார்.