திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. திரையரங்கு-திரைப்படம்
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 16 மே 2023 (17:15 IST)

மிர்ச்சி சிவா - யோகி பாபு காம்போவில் " காசேதான் கடவுளடா " லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

ஜெயங்கொண்டான் உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் காசேதான் கடவுளடா. எம் கே ஆர் பி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சிவா மற்றும் யோகி பாபு உடன் இணைந்து பிரியா ஆனந்த், ஊர்வசி, கருணாகரன், சிவாங்கி, புகழ், தலைவாசல் விஜய், விடிவி கணேஷ் ஆகியோரோடு மறைந்த நடிகர் மனோபாலா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 
 
கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படம்  சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியான காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக் படமான இந்த படம் வருகிற மே 26 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
50 ஆண்டுகளுக்கு முன் வெளியான கருப்பு வெள்ளைப் படமான காசேதான் கடவுளடா என்ற திரைப்படம் தற்போது ஒரு சில மாற்றங்கள் செய்து காமெடி கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.