வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 2 மே 2023 (18:40 IST)

சின்சியரா நடித்த விஜய் சேதுபதி... காமெடிய பண்ணப்போகும் மிர்ச்சி சிவா - சூது கவ்வும் -2 டீசர்!

சூதுகவ்வும் எனும் ட்ரண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. 2013ம் ஆண்டு வெளியான இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்பட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து மாஸ் காட்டியிருப்பார். 
 
இந்நிலையில் தற்போது  10 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் உருவாகி வருகிறது.இப்படத்தில் ஹீரோவாக  நடிகர் மிர்ச்சி சிவா நடிக்கிறார். இவருடன் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் விஜய் சேதுபதி ரேஞ்சுக்கு யாராலும்  நடிக்க முடியாது என்கிறார்கள் ரசிகர்கள். இதோ அந்த வீடியோ லிங்க்: