1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Murugan
Last Modified: செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (17:29 IST)

என்னை வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள் - பிக்பாஸுடன் மோதும் ரைசா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா வெளியேறியதற்கு பின், அந்நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்து கொண்டே வருகிறது. புதிதாக பிந்து மாதவியை உள்ளே அனுப்பினார்கள். ஆனால், அவரால் எந்த சுவாரஸ்ய சம்பவங்களும் நடைபெறவில்லை. 
 
அதன் பின், காயத்ரிக்கு உறுதுணையாக இருந்த நடிகர் சக்தி வெளியேற்றப்பட்டார். அதன் பின் காயத்ரி புரணி பேச ஆளில்லாமல் தவித்து வருகிறார்.
 
இந்நிலையில் இன்று புரொமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சியினர் வெளியிட்டுள்ளனர். அதில், பகலில் ரைசா தூங்கிக் கொண்டிருக்கிறார். அவரை நாய் குறைப்பு சத்தத்துடன் பிக்பாஸ் எழுப்ப, கோபமடைந்த ரைசா ‘வாயை முடு’ எனக் கத்துகிறார். அதன் பின் அவரை தனி அறையில் கூப்பிட்டு பேசும் பிக்பாஸ், விதிமுறைகள் உங்களுக்கு தெரியும். பகலில் நீங்கள் தூங்கக் கூடாது எனக் கூற, தூங்க முடியாத இடத்தில் என்னால் இருக்க முடியாது. என்னை வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள் என ரைசா கோபமாக கத்துகிறார்.
 
இதன் தொடர்ச்சி இன்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.