1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (15:33 IST)

இந்த வாரம் காயத்ரியை வச்சி செய்யப்போகுது விஜய் டி.வி.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, இந்த வாரம் காயத்ரியை வைத்து டி.ஆர்.பி.யை எகிற வைக்கப் போகிறது.
 


 

‘பிக் பாஸ்’ வீட்டில் உள்ள பிரபலங்களில், காயத்ரி – ஷக்தி வாசு போல அவ்வளவு நெருக்கமானவர்கள் யாரும் கிடையாது. இருவருமே பயங்கர முன்கோபிகள் என்றாலும், ஒருவர் கோபப்படும்போது மற்றொருவர் சமாதானப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வருவர்.ஆனால், நேற்று ஷக்தி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். எனவே, காயத்ரியிடம் அவ்வளவு நெருக்கமாகப் பேச ஆள் கிடையாது. பயங்கரமாக எதற்கெடுத்தாலும் கோபப்படும் காயத்ரி, ஷக்தி இல்லாமல் என்ன செய்யப் போகிறார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதுதான் விஜய் இந்த நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.யை எகிற வைக்கப் போகிறது.