செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (12:10 IST)

பிக்பாஸ் வீட்டில் செலிபிரிட்டி; விஜய் டிவியின் செல்ல பிள்ளையாம்??

தமிழகத்தின் சமீபத்திய ஹாட் டாபிக் பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 


 
 
இதே போல தெலுங்கிலும் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்க பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்துவருகிறது. கடந்த வாரம் தெலுங்கு பிக்பாஸில் ராணா பங்கேற்றார்.
 
ராணா நடித்துள்ள ‘நேனே ராஜூ நேனே மந்திரி’ படத்தை பிரபலப்படுத்துவதற்காக பிக் பாஸ் வீட்டுக்கு சென்றார். பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு சில மணிநேரம் போட்டியாளர்களுடனும் இருந்தார்.
 
இந்நிலையில், இதே போல் தமிழ் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒருநாள் மட்டும் சிவகார்த்திகேயன் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
 
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடித்திருக்கும் படம், வேலைக்காரன். இந்தப் படத்தின் உரிமையை விஜய் டி.வி வாங்கியுள்ளது. 
 
சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் செல்ல பிள்ளை. எனவே, படத்தின் விளம்பரத்திற்காக சிவகார்த்திகேயன் விரைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என தெரிகிறது.