பெரிய சேனலையெல்லாம் பின்னால் தள்ளிய தூர்தர்ஷன்!: சக்திமான் பவர் அப்படி!
இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பழைய நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்த தூர்தர்ஷன் இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் சேனலாக மாறியுள்ளது.
ஊரடங்கிற்கு முன்னால் தூர்தர்சன் என்றால் என்ன என்று கேட்கும் மனநிலையில் இருந்த மக்கள், இப்போது நாள்தோறும் தூர்தர்சனிலேயே மூழ்கி கிடக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் ஊரடங்கு அறிவித்ததை தொடர்ந்து வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்களுக்கு பொழுதுபோக்கிற்காக தூர்தர்ஷன் டிவி 1990களில் மிகவும் பிரபலமாக இருந்த ராமாயணத்தை மறுஒளிபரப்பு செய்ய தொடங்கியது.
அது ரசிகர்களிடையே பரவலாக வரவேற்பை பெறவே தொடர்ந்து 90ஸ் கிட்ஸ்களின் விருப்ப தொடரான சக்திமான், ஷாரூக்கான் நடித்த தொடரான சர்க்கஸ், பிரபல டிடெக்டிவ் தொடரான பூமேஷ் பக்ஷி ஆகியவற்றை தொடர்ந்து ஒளிபரப்ப தொடங்கியுள்ளது தூர்தர்ஷன்.
இதனால் மற்ற சேனல்களை விட இந்திய அளவில் அதிகம் பார்க்கப்படும் சேனலாக தூர்தர்ஷன் மாறியுள்ளது. மற்ற சேனல்கள் அதிகமாக மக்களால் பார்க்கப்பட்டாலும் இராமாயணம், மகாபாரதம், சக்திமான் போன்ற தொடர்கள் ஒளிபரப்பாகும்போது தூர்தர்ஷன் மற்ற சேனல்களை விட அதிக பார்வையாளர்களை பெறுவதாக தொலைக்காட்சி பார்வையாளட் அமைப்பு தெரிவித்துள்ளது.