1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 9 ஏப்ரல் 2020 (15:35 IST)

வாவ் செம வாய்ஸ்... ஆராரிராரோ பாடலை பாடி அசத்தும் நடிகர் பரத் -வீடியோ!

"பாய்ஸ்" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார் நடிகர் பரத். அதையடுத்து ‘காதல்’, ‘வெயில்’ உட்பட பல்வேறு படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு புது நடிகர்களின் வரவுகளால் படவாய்ப்பு கிடைக்காமல் மார்க்கெட்டில் பின் தாங்கினார்.

இதையடுத்து 2013ம் ஆண்டு ஜெஷ்லி என்பவரால் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இந்த தம்பதிக்கு அழகிய இரட்டை மகன்கள் பிறந்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வரும் பிரபலங்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நடிகர் பரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜீவா நடித்து வெளிவந்த ராம் படத்தில் இடம்பெற்ற ஆராரிராரோ என்ற பாடலை சூப்பராக பாடி அசத்தியிருக்கிறார். இந்த வீடியோவை கண்ட அனைவரும் அவரின் பாடும் திறமையை கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Yuvan rocks !!

A post shared by Bharath (@bharath_niwas) on