வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Modified: சனி, 25 ஜனவரி 2020 (15:10 IST)

பெரியத்திரை நட்சத்திரங்களை இழுக்கும் சித்தி 2 ! பாக்ய்ராஜ் & சமுத்திரக்கனி சிறப்புத் தோற்றம் !

சித்தி 2 தொலைக்காட்சித் தொடரில் பாக்யராஜ் உள்ளிட்டோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு சித்தி தொடரின் இரண்டாம் பாகம் மீண்டும் உருவாகவுள்ளது. இதில் முந்தைய பாகத்தில் நடித்த ராதிகா சரத்குமாரோடு பொன்வண்ணன், ரூபினி, மீரா வாசுதேவன், ஷில்பா, மகாலட்சுமி, நிகிலா ராவ், ப்ரீத்தி, அஷ்வின், ஜீவன்ரவி, அருள்மணி உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகும் இந்த தொடரில் பல திரையுலக ஜாம்பவான்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் முன்னோட்டமாக திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ்  மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளனர். இந்த தொடரை சுந்தர்.கே.விஜயன் இயக்குகிறார்.