படப்பிடிப்பு தொடங்கும் முன்பே நெட்பிளிக்ஸ் வாங்கிய தனுஷ் படம்.. எத்தனை கோடி?
நடிகர் தனுஷ் நடிப்பில், அமரன் திரைப்பட புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள D55 திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நெட்பிளிக்ஸ் இந்தியா சவுத் தளத்தின் பொங்கல் சிறப்பு அறிவிப்புகளின் ஒரு பகுதியாக இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு திரையரங்குகளில் இப்படம் வெளியான பிறகு, நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.
தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையிலேயே, இதன் டிஜிட்டல் உரிமை மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இது தனுஷ் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பை அப்பட்டமாக உணர்த்துகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் போஸ்டரில் இடம் பெற்றுள்ள "வன்முறை நிறைந்த இந்த உலகில் குடும்பத்தை கண்டடைதல்" என்ற வாசகம் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமியின் முந்தைய படமான அமரன் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தனுஷுடன் அவர் இணையும் இந்த அதிரடி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
