1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (20:48 IST)

முதல்வர், கமல்ஹாசனிடம் பாராட்டு பெற்ற ரூ.1 கோடி பெண்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ராதிகா நடத்திவரும் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியில் சமீபத்தில் கௌசல்யா என்ற மாற்றுத்திறனாளி பெண், ரூபாய் ஒரு கோடி பரிசு வென்றார். வாய் பேச முடியாத இவர் சைகைகள் மூலமே கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லி இந்த பரிசை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஒரு கோடி பரிசு வென்ற கௌசல்யா இன்று மாலை கமலஹாசன் அவர்களை சந்திக்க வேண்டுமென ராதிகாவிடம் விருப்பம் தெரிவிக்க, இதற்காக ராதிகா ஏற்பாடு செய்துள்ளார் இன்று கமல்ஹாசனுடன் கௌசல்யா தனது குடும்பத்துடன் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார் 
 
அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் கௌசல்யா தனது குடும்பத்தினர்களுடன் இன்று சந்தித்து நேரில் சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடப்பட்டது முதல்வர் பழனிசாமி அவர்கள் மலர்வளையம் கொடுத்து கௌசல்யாவை ஆசி செய்து அவருக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்தினார். ஒரே நாளில் முதல்வர் மற்றும் கமல்ஹாசனை சந்திக்க ஏற்பாடு செய்த ராதிகாவுக்கு கௌசல்யா நன்றி தெரிவித்துள்ளார்.