1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. siruithai siva join hands with ajith again

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்!.. ஆதிக் ரவிச்சந்திரன் என்னாச்சி?...

ajith siva
குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித்தின் புதிய படம் இதுவரை துவங்கப்படவில்லை. அதேநேரம் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது மட்டும் உறுதியானது. இந்த படத்தில் நடிக்க அஜித் 185 கோடி சம்பளம் கேட்டதாக சொல்லப்பட்டது ஆனால் அந்த சம்பளத்தை கொடுக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை. எனவே, மும்பைக்கு சென்று தயாரிப்பாளர்களை தேடினார்கள். இறுதியாக மும்பையில் ஒரு தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன் வந்ததாக சொல்லப்பட்டது.

ஆனாலும் இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது வரை துவங்கப்படவில்லை.. இந்நிலையில்தான் திடீர் டிவிஸ்ட்டாக அஜித்தின் புதிய படத்தை சிறுத்தை சிவா இயக்கப் போகிறார் என்கிற செய்தி வெளியே கசிந்திருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா திரைப்படம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

எனவே அவரின் இயக்கத்தில் நடிக்க எந்த நடிகரும் முன் வரவில்லை. ரஜினி, விஜய் சேதுபதி என பலரை அணுகியும் எதுவும் நடக்கவில்லை. சமீபத்தில் துபாய் சென்ற சிவா அஜித்தை சந்தித்து இதை சொல்லி புலம்பியதாக தெரிகிறது. இதையடுத் ‘ நீங்கள் ஒன்றும் வருத்தப்பட வேண்டாம்.. எனது அடுத்த படத்திற்கு நீங்கள்தான் இயக்குனர்’ என அஜித் அவரிடம் சொன்னதாக சொல்லப்படுகிறது. எனவே, அஜித்தின் புதிய படத்தை சிறுத்தை சிவா இயக்க நிறைய வாய்ப்புண்டு.
அடுத்த கட்டுரையில்
விவாகரத்துக்குப் பின் முதன்முறையாக பொற்கோவிலில் தரிசனம் செய்த ஹன்சிகா: லைக் செய்த திரிஷா