லாரி உருண்டதால்…. ரயில் தடம்புரண்டு விபத்து…36 பேர் பலி
தைவான் நாட்டில் பார்க்கிங்கில் செய்யப்படாத லாரி தண்டவாளத்தில் விழுந்தது. அதன்மீது வேகமான வந்த ரயில் மோதியதல் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.
கிழக்கு தைவானின் ஹூவாலியன் வடக்குப் பதியில் 350 பயணிகள் பயணித்த ரயில் ஒன்று சுரங்குப்பாதை அருகில் வந்த போது, ஏற்கனவே கீழே உருண்டுவிழுந்த லாரி மீது மோதி பெரும் விபத்துக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்திற்குப் பிறகு ரெயிலில் முதல் 4 பெட்டிகளிலிருந்து இதுவரை 90 பேரை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். 72 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்தக் கோர விபத்தில் காயமடைந்தவர் பலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.