1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (15:59 IST)

ரிசல்ட் வரும்போது எங்கள் பலம் தெரியும்… பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனுத்தாக்கல்!

தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

அமமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது என்பதும் அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் தேமுதிகவின் 60 தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர் போட்டியிடவில்லை என்பதும் விஜயகாந்த் முதல் முறையாக போட்டியிட்ட விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் மட்டும் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று பிரேமலதா விஜயகாந்த் இன்று விருத்தாசலத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  ‘ 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வலுவாக இருக்கிறது.எல்லா கிராமங்களிலும் எங்களுக்கு கிளைக் கழகம் உள்ளது. மே 2ம் தேதி ரிசல்ட் வரும்போது எங்கள் பலத்தை பார்ப்பீர்கள்’ எனக் கூறியுள்ளார்.