செவ்வாய், 13 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (10:31 IST)

ஓட்டளிப்பது கடமை - சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் !

ஓட்டளிப்பது கடமை - சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் !
சென்னை எல்லீஸ் ரோட்டில் உள்ள வாக்குச்சாவடியில் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் வாக்கு பதிவு செய்தார். 

 
காவல்துறை ஆணையாளர் மகேஷ்குமார் அவர்கள் எல்லிஸ் ரோட்டில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு பதிவு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஓட்டளிப்பது ஒவ்வொரு தனி மனிதனுடைய கடமை என்றும் எல்லோரும் அமைதியாகவும் முழுமையாகவும் ஜனநாயக கடமை நிறைவேற்ற வாக்களிக்க வேண்டுமென்று பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
 
சென்னையில் 30 ஆயிரம் காவலர்கள் தேர்தல் பணியில் பாதுகாப்பு ஈடுபடுத்தப் பட்டிருப்பதாக தெரிவித்த அவர் ஒரு துணை ஆணையர் ஒரு இணை ஆணையர் காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் மத்திய பாதுகாப்பு துணை ராணுவ படையினர் என எல்லோரும் இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்தார்.
 
பதற்றமான வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என சென்னை தொகுதியில் 328 பகுதியில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 50% வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ராணுவப் படையினர் மீதியுள்ள 50 சதவீத வாக்குச்சாவடிகளில் தமிழ்நாடு சிறப்பு அதிரடி காவல்படையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.