வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (15:32 IST)

மிதுனம்: ஆவணி மாத ராசி பலன்கள்

(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்) - கிரகநிலை: ராசியில்  ராஹூ, சுக்ரன்  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சந்திரன் -  தைரிய ஸ்தானத்தில்  புதன், சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) - லாப ஸ்தானத்தில்  செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

    
பலன்:
எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காத மிதுன ராசியினரே இந்த மாதம் காரிய அனுகூலம்  ஏற்படும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை   அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு  காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள்  கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.
 
அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு  முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.
 
மிருகசீரிஷம்:
இந்த மாதம் குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும்.  குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக   பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே  நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.
 
திருவாதிரை:
இந்த மாதம் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல் படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம்.
 
புனர்பூசம்:
இந்த மாதம் குடும்ப பிரச்சனை தீரும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை தரும். பணவரவு உண்டு. ஆனால் வீண் செலவும்  ஏற்படும். சொத்துக்கள்  வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. 
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்; 
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 24, 25