1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன...?

வரலட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை தமிழ்நாடு மட்டுமல்லாது வடஇந்திய மக்களும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழிபடலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விடவேண்டும். வரலட்சுமி தினத்தன்று  புண்ணிய நதிகளில் நீராடலாம். இது ஓராண்டு லட்சுமி வழிபாட்டுக்குரிய பலன்களை நமக்குத் தரும். 
 
வரலட்சுமி பூஜை தினத்தன்று சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வணங்கினால் நல்லது. வரலட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும். 
 
ஆரோக்கியம் அதிகரிக்கும் லஷ்மியை மகிழ்விக்கும் இந்த விரதமிருக்கும் பெண்மணி இவ்வுலகில் சகல போகங்களையும் பெற்று அனுபவித்தபின் வைகுந்தம்  சேருவாள். எல்லா சுக்லபட்ச வெள்ளிக்கிழமைகளில் மஹாலஷ்மியை முறைப்படி பூஜிப்பவர்கள் வாழ்நாள் முழுதும் செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள். அவர்கள் குடும்பம் தழைக்கும்.

இந்த விரதக்கதையை படிப்பவர்கள் கேட்பவர்களும் வரலஷ்மியின் அருளால் தனதான்ய சம்பத்துடன் சௌக்கியமாக  வாழ்வார்கள் என தேவர்கள் வாழ்த்துகின்றனர்.
 
பலன்கள்:
 
இவ்விரதத்தின் மூலம் குழந்தை பாக்கிய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம்  நீங்கும்.
 
கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று  சேர்வார்கள்.
 
இந்த நன்னாளில் அம்மன், கோவில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி, பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் பிரசாதம் தரலாம். இல்லாதோர்,  இயலாதோருக்கு தானம் செய்ய, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.