திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (15:29 IST)

மேஷம்: ஆவணி மாத ராசி பலன்கள்

(அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ, சுக்ரன்  - சுகஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம  ஸ்தானத்தில் புதன், சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன.  

   
பலன்:
தலைமை தாங்கும் பண்பை இயற்கையிலேயே பெற்ற மேஷ ராசியினரே இந்த மாதம்  செலவு அதிகரிக்கும். அதே நேரத்தில் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம்  மூலம் சாதகமான பலன் வரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில்  செல்லும் போதும் ஆயுதங்களை  கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.
 
மாணவர்களுக்கு மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும். 
 
அஸ்வினி: 
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  சாதகமான பலன் கிடைக்கும்.
 
பரணி:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர்  புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை  உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். 
 
கார்த்திகை:
இந்த மாதம் தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.
 
பரிகாரம்: முருகனை வணங்க குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தீரும். காரியவெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி 
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 19, 20, 21; செப்டம்பர் 16