புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:27 IST)

கும்பம் - மாசி மாத பலன்கள்

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்) - கிரக நிலை: ராசியில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில்  செவ்வாய் - சுகஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சுக்ரன், சனி  - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
 
குழந்தைகளால் பெருமை அடையும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் அடுத்தவர்களுக்கு உதவப் போய் அதனால் அவதிப்பட்ட நேரலாம்.  எனவே கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களை கையாளும்போதும் கவனம்  தேவை. . மனதில் இருந்த உற்சாகம் குறையும்.
 
தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை  வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக  ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம்.
 
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.  குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
 
பெண்களுக்கு வீண் பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை தரும். மற்றவர்களுக்காக  எந்த உத்திரவாதமும் தராமல்  இருப்பது நல்லது.
 
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.
 
கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம்.  புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.
 
அரசியல்துறையிலிருந்து முன்னேறுவதற்கான பாதையை நாம் கண்டறிந்து செல்வதற்கு புதிய விதமான வழிகளை அமைத்துக்கொண்டு  அவ்வழிகளை பயனப்பாதையாக்கிச் செல்வீர்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்களின் சேவையைப் புரிந்துக் கொள்வார்கள்.
 
அவிட்டம் 3, 4 பாதம்:
 
இந்த மாதம் தேவையற்ற நண்பர்களின் சகவாசமும் பொழுதுபோக்குகளும் உங்களின் வாழக்கை நிலையையே மாற்றியமைக்கும். வண்டி  வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது.
 
சதயம்:
 
இந்த மாதம் எதிலும் சற்று நிதானமாகச் செயல்படுவது நல்லது. தனவரவுகள் திருப்தி அளிப்பதாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளை  ஏற்படுத்தும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
 
பூரட்டாதி 1, 2, 3  பாதம்
 
இந்த மாதம்  தொழில்ரீதியாக சில போட்டிகளைச் சந்திக்கநேரிடும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். குடும்பத்தில்  கணவன்-மனைவி இடையே ஒற்றுமை குறையும். உற்றார்-உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.
 
பரிகாரம்: சனிக்கிழமையில் எள் சாதம் சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறையும். உடல்  ஆரோக்கியம் உண்டாகும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
 
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி15, 16, 17
 
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி22, 23.