விஜய் சேதுபதி வெளியிட்ட "சித்திரம் பேசுதடி 2" ட்ரைலர்!

Last Modified வியாழன், 6 டிசம்பர் 2018 (12:01 IST)
மிஷ்கின் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் ஆன  படம் ‘சித்திரம் பேசுதடி’. இந்தப்படத்தில் நரேன், பாவனா, ‘காதல்’ தண்டபாணி ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தில் கானா உலகநாதன் பாடி, மாளவிகா நடனமாடிய ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...’ என்ற பாடல் ரெக்கார்ட் பதித்து சூப்பர் ஹட் ஆனது.


 
சுமார் 12 வருடங்கள் கழித்து " சித்திரம் பேசுதடி" படத்தை இரண்டாம் பாகமாக இயக்குனர் ராஜன் மாதவ் இயக்கியுள்ளார். ‘முரண்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனரான அறிமுகமான இவர், தற்போது விதார்த், ராதிகா ஆப்தே, அஜ்மல், காயத்ரி, அசோக் உட்பட பலர் நடிப்பில் திரில்லர் பாணியில் படத்தை இயக்கியுள்ளார்.
 
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டு படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :