விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் ஜீவா?

Last Modified புதன், 5 டிசம்பர் 2018 (08:08 IST)
விஜய்சேதுபதி நடித்த 'ரெக்க' மற்றும் அருண்விஜய் நடித்த 'வா டீல்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னசிவா இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஜீவா கேபிள் டிவி ஆபரேட்டராக ந்டிக்கவுள்ளார்.

மாயவரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.


இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் ஜீவா ஜோடியாக புதுமுக நடிகை நடிக்கவுள்ளதாகவும், மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்பது கொசுறுச்செய்தி


இதில் மேலும் படிக்கவும் :