Anchor வாய்ப்பு கொடுத்ததும் ஆர்வக்கோளாறில் ராஜு - கடுப்பில் "வாரிசு" டீம் !
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 12ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ லன்ச் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் வாய்ப்பு பிக்பாஸ் பிரபலம் ராஜுவிற்கு கிடைத்துள்ளது. இது குறித்து ஆர்வக்கோளாறில் ராஜு, "வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவை தான் தொகுத்து வழங்கப்போவதாகவும். அது வரும் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற இருப்பதாக ட்வீட் பதிவு ஒன்றை இருந்தார்.
இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். ஆனால், அந்த பதிவை சில நிமிடங்களிலே ராஜு டெலீட் செய்துவிட்டார். காரணம் படக்குழுவே இன்னும் இசை வெளியிட்டு விழா குறித்து எதுவும் அறிவில்லை. ஆங்கர் வாய்ப்பு கிடைத்ததும் ஆர்வக்கோளாறில் ராஜு இப்படி பதிவிட்டுட்டாரே என படக்குழுவினர் புலம்பியுள்ளார்களாம்.