1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 மே 2023 (10:39 IST)

ஆத்தாடி.. எத்தேத்தண்டி..! டைனோசரை தின்னும் ராட்சஸ சுறா! – மிரட்டும் Meg 2 ட்ரெய்லர்!

The Meg 2 The Trench Trailer
ராட்சஸ சுறா மீனை வைத்து ஹிட் அடித்த Meg படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகியுள்ளது.

ஹாலிவுட்டில் வெளியாகும் டைனோசர், சுறா, முதலை போன்ற ராட்சத ஜந்துக்கள் குறித்த படங்கள் பொதுவாகவே உலகம் முழுவதும் ரொம்ப ஃபேமஸ். அதிலும் ஹாலிவுட் சினிமாவுக்கு சுறாக்கள் மேல் தனி பிரியம். எக்கச்சக்கமாக சுறாக்கள் மக்களை தாக்குவது போலவும், மக்கள் தப்பிப்பது போலவும் படமாக எடுத்து தள்ளியிருக்கிறார்கள்.

அப்படியாக பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உண்மையாக வாழ்ந்த ராட்சஸ சுறாவான மெக்லடான் என்ற சுறா மனிதர்களை தாக்குவது போல எடுக்கப்பட்ட படம்தான் ‘தி மெக்’. 2018ல் வெளியான இந்த படம் பெரும் ஹிட் அடித்தது. இதில் ஜேசன் ஸ்டாத்தம் ஹீரோவாக நடித்திருந்ததோடு, ‘நீ எத்தேத்தண்டி சுறாவா வேணாலும் இரு.. ஆனா எங்கிட்ட ஒதுங்கியே இரு’ என்ற ரகமாய் சுறாவுக்கே டஃப் குடுத்து அதை வேட்டையாடுவார்.

The Meg 2 The Trench Trailer


தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியாக உள்ள நிலையில் அதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஆரம்ப காட்சியே டைனோசர்களிலேயே மிகப்பெரும் டானாக அறியப்பட்டும் டி-ரெக்ஸை நாஷ்டா செய்கிறது மெக்லடான். இந்த படத்தில் மெக்லடானுக்கு துணையாக ஒரு ராட்சத ஆக்டோபஸும் வேறு சில சுறாக்களும் கூட வருகின்றன.

இந்த ஜந்துக்குள் டீமை நமது ஹீரோ ஸ்குவாட் எப்படி அழிக்கப்போகிறார்கள் என்பதை கண்ணை பறிக்கும் அற்புதமான 3டி க்ராபிக்ஸ் காட்சிகளில் காட்டியிருக்கிறார்கள். இந்த படத்தை 3டியில் பார்ப்பது மெக்லடான் வாயிக்குள் நாமே மாட்டிக் கொண்டது போன்ற த்ரில் அனுபவத்தை கொடுக்கும் என நம்பலாம்.

Edit by Prasanth.K