1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2023 (18:25 IST)

நான் என்ன செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கின்றனர்- விஜய் பட நடிகை

தமிழ் சினிமாவில் விஜய்  நடித்த தமிழ் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.

இவர், கிரிஸ், உள்ளிட்ட பாலிவுட் படங்களில் அடுத்து முன்னணி நடிகையானார்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க பாப் படகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதியர்க்கு ஒரு குழந்தை உள்ளதது. தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட பிரியங்கா சோப்ரா,  அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து படங்களில் நடித்துவிட்டுச் செல்கிறார்.

சமீபத்தில், ஆர்.ஆர்.ஆர் படத்தை தமிழ் படம்  வெற்றி பெற்றுள்ளது என்று கூறினார்.இதற்கு தெலுங்கு ரசிகர்கள் விமர்சித்து, அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரியங்கா சோப்ரா,  ‘’நான் என்ன செய்தாலும் சிலர் தவற்றைக் கண்டுபிடிக்கின்றனர். அதை ரசிக்கவும் செய்கின்றனர். முன்பு சுதந்திர உணர்வுடன் இருந்தேன்.இப்போது குடும்பத்தினரை கவனித்து கவனமாக இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.