1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
  4. Sema Film trailer Released Sivakarthikeyan

செம படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

செம படம்
ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருக்கும் ’செம‘ படத்தின் ட்ரெய்லரை சற்று முன் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அர்த்தனா நடித்திருக்கிறார். யோகி  பாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லிங்க பைரவி கிரியேஷன்ஸ் பி.ரவிச்சந்திரனுடன் இணைந்து இயக்குநர்  பாண்டிராஜ், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான‘பசங்க புரொடக்‌ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். இந்தப் படம் மே 25-ம் தேதி ரிலீஸாக உள்ளது. சமீபத்தில், வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் முதல் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 
இந்த நிலையில், ‘செம’ படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிவ கார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.