1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By papiksha
Last Updated : சனி, 15 பிப்ரவரி 2020 (14:02 IST)

யோகி பாபு நடித்துள்ள 'பன்னி குட்டி' ட்ரெய்லர் ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் காமெடி பிரபலங்களான சந்தானம், பரோட்டா சூரிக்கு அடுத்து காமெடி கிங்காக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார். 
 
கடின உழைப்பிலும், எதார்த்த காமெடி நடிப்பிலும் பட்டையை கிளப்பி வரும் யோகி பாபு தற்போது அணுசரன் முருகையா இயக்கத்தில் உருவாகும் பன்னி குட்டி படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் யோகிபாபுவுடன் சேர்ந்து கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். 
 
இந்த படத்துக்கு 'முகமூடி', 'கிருமி', 'யுத்தம் செய்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கே இசையமைத்துள்ளார். இப்படத்தின் டைட்டில் வெளியான போதே நல்ல ரீச் ஆனது. இந்நிலையில் சற்றுமுன் "பன்னி குட்டி" படத்தின் ட்ரைலர் யூடியூபில்  வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் பன்னி பிடிக்கும் நண்பராக்களாக நான்கு பேர் நடித்துள்ளனர்.