1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By
Last Updated : வியாழன், 30 மே 2019 (19:14 IST)

வெறித்தனமான நடிப்பில் டாப்ஸியின் "கேம் ஓவர்" - வைரலாகும் ட்ரைலர்!

வெறித்தனமான நடிப்பில் டாப்ஸியின்
கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற நடிகை டாப்ஸி தற்போது கேம் ஓவர் என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். 

 
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸும், ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இதனை தயாரித்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு, ரசிகர்கள் டாப்ஸியின் மிரட்டலான நடிப்பை வியந்து பாராட்டினார். 
 
இந்நிலையில் தற்போது டாப்ஸியின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் ட்ரைலரை  நடிகர் தனுஷும்,தெலுங்கு ட்ரைலரை நடிகர் ராணாவும் இந்தி ட்ரைலரை இயக்குனர் அனுராக் கஷ்யாப்பும் வெளியிட்டுள்ளனர்.