அவனுக்கு பிடிச்சதை அடைய என்ன வேணாலும் செய்வான் "அசுரகுரு" ட்ரைலர் வெளியானது !

papiksha| Last Updated: புதன், 11 மார்ச் 2020 (12:07 IST)

நடிகர் விக்ரம் பிரபுவின் "அசுரகுரு" படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது.

`துப்பாக்கிமுனை' படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள `அசுரகுரு'. திரைப்படத்தை இயக்குநர் மோகன்ராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜ்தீப் இயக்கியுள்ளார். மகிமா நம்பியார் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

2016-ம் ஆண்டு சேலத்திலிருந்து சென்னை
வந்த விரைவு ரயிலில் மேற்கூரையைத் துளையிட்டு 5.75 கோடி ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த உண்மை சம்பவத்தை மைய கருவாக கொண்டு விறு விறுப்பாக அசுரகுரு படத்தை எடுத்துள்ளனர்.

வருகிற 13ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது . நூதனமாக கொள்ளை திருட்டில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து அதை ராணியாக பார்க்கும் பண அரக்கனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :