சர்வதேச திரைப்பட திருவிழா!
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறும். அந்தவகையில் 2021 ஆம் ஆண்டில் 52 வது சர்வதேசத் திரைப்பட விழா வரும் நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தச் சர்வதேசத் திரைப்பட விழாவிற்கான விதிமுறைகள் மற்றும் போஸ்டரை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் சினிமாத்துறையில் சி்றந்து விளங்கும் ஜாம்பாவான்கள், உள்ளிட்ட பிரபலங்களுக்கு சத்யஜித் ரே விருது இந்த விழாவின்போது, வழங்கப்படும் எனவே இந்த வருடம் யாருக்கு வழங்கப்படும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.