1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 ஜூலை 2021 (22:04 IST)

நடிகர் பிரசாந்தின் ‘அந்தகன்’ படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்!

பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் தயாரிப்பில் உருவாகிவரும் ‘அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது தெரிந்ததே 
 
இடையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த ‘அந்தகன்’ படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இன்றைய படப்பிடிப்பில் பிரசாந்த் மனோபாலா சிம்ரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர் என்பதும் இந்த படப்பிடிப்பு இன்னும் இருபது நாட்கள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
‘அந்தகன்’ படத்தை அதன் தயாரிப்பாளர் தியாகராஜனே இயக்கி வருகிறார் என்பதும் அவர் ஏற்கனவே பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தாதூன் என்ற பாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படத்தின் ரீமேக்தான் அந்தகன் என்பதும் இந்தப் படம் பிரசாந்த்துக்கு தமிழ் திரையுலகில் ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தி தரும் என்பதும் குறிப்பிடத்தக்கது