1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (14:49 IST)

விக்ரம் திரைப்படம் ஓடிடியில் இந்த தேதியிலா? வெளியான தகவல்!

கமல் நடிப்பில் ஜூன் 3 ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்த படம் கடந்த 13 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வருகிறது. இதுவரை 250 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. திரையரங்குகள் மூலமாக கிட்டத்தட்ட 300 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது வாரம் தொடங்கி வார தொடக்க நாளான இன்றுகூட விக்ரம் திரைப்படத்துக்கு கணிசமான கூட்டம் உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.  இந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் மிகப்பெரிய ஹிட் படமாக விக்ரம் அமைந்துள்ளது. இந்நிலையில் விக்ரம் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூலை முதல்வாரத்தில் ரிலீஸாகும் என தகவல்கள் தற்போது பரவி வருகின்றன. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.