திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (10:15 IST)

ஜாலி தாத்தா பேரனாக பாரதிராஜா & தனுஷ்… ரகளையான கிளிம்ப்ஸ் வீடியோ

தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். ஏற்கனவே சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் என அடுத்தடுத்து நடந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவுற்றது.

இதையடுத்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் படம் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸாகும் என படத்தை வாங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் தனுஷ் இதை சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தந்தையர் தினத்தை முன்னிட்டு படத்தில் தனுஷ் மற்றும் பாரதிராஜா ஆகியோர் இடம்பெறும் ஜாலியாக காட்சி ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது.