1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 14 ஆகஸ்ட் 2021 (16:54 IST)

'பிக்பாஸ்' பிரபலத்தின் புதிய பட போஸ்டர் வைரல்

பிக்பாஸ் புகழ்  முகேன் ராவ் ஹீரோவாக நடிக்கும் படம் வேலன். இப்படத்தின் போஸ்டர் இன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மக்களிடம் பிரபலமானவர் முகேன்.

இவர் இயக்குநர் அஞ்சனா இயக்கத்தில்  வெற்றி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாகத்தகவல் வெளியானது.

இதையடுத்து ஸ்கைமேன் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கவின்  இயக்கவுள்ள வேலன் படத்தின் முகேன் நடித்துள்ளார். இப்படத்தின் பிரபு, சூரி, தம்பிராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும்,  இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். வேலன் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது