திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (15:28 IST)

கிளாமரின் உச்சத்தில் யாஷிகா , பாவாடையில் யோகி பாபு - ட்ரெண்டான ஜாம்பி ட்ரைலர்!

யோகிபாபு, யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜாம்பி. எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை புவன் நல்லன் இயக்கியுள்ளார். 


 
ஹாரர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜாம்பிக்களிடம் மாட்டிக் கொண்ட யோகி பாபு மற்றும் குழுவினர் அங்கிருந்து தப்பிக்க திட்டம் தீட்டுவது போல் ஜாம்பி டிரைலர் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
 
யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதமே முடிவடைந்தது. 
 
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது. கிளாமர் உடையணிந்து  கவர்ச்சி நடனமாடி யாஷிகா அசத்தியுள்ளார். ஒரு இடத்தில் ஜாம்பிக்களிடம் மாட்டிக் கொண்ட யோகி பாபு மற்றும் குழுவினர் அங்கிருந்து தப்பிக்க திட்டம் தீட்டுவது போல் ஹாரர் காமெடியில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் ஒரே நாளில் ட்ரெண்டிங்கில் 5 வது இடத்தை பிடித்துள்ளது.