வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2019 (13:18 IST)

அடிபட்டும் திருந்தாத யாஷிகா - கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ் !

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். 


 
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.  அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது யாஷிகா யோகி பாபு உடன் "ஜாம்பி" படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். 


 
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன் காலில் அடிபட்டு காயமுற்ற நிலையிலும் அரைகுறை ஆடையணிந்து மோசமான கவர்ச்சி பாஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் இந்த நேரத்தில் கூட  கவர்ச்சியை காட்டாமல் உங்களால் இருக்கமுடியவில்லையா என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.