இளையராஜா பாடலை ரீமிக்ஸ் செய்த யுவன்ஷங்கர் ராஜா: எந்த படத்தில் தெரியுமா?
இளையராஜா பாடலை ரீமிக்ஸ் செய்த யுவன்ஷங்கர் ராஜா: எந்த படத்தில் தெரியுமா?
இசைஞானி இளையராஜாவின் திரைப்பட பாடல்களை ஏற்கனவே பல இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் செய்தது குறித்து தெரிந்து இருப்போம். இந்த நிலையில் அவரது பாடலை அவரது மகன் யுவன்சங்கர் ராஜாவே ஒரு படத்தில் பயன்படுத்தி என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது
சந்தானம் நடிப்பில் கார்த்திக் யோகி இயக்கிய திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதும் மிகக் குறுகிய காலத்தில் 8 மில்லியன் பேர் இந்த படத்தின் டீசரை பார்த்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இளையராஜா இசையில் கமலஹாசன் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’மைக்கேல் மதன காமராஜன்’. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ’பேர் வச்சாலும் வச்சாலும்’ என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து ’டிக்கிலோனா’ படத்திற்காக யுவன் சங்கர் ராஜா பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது
இதனை இயக்குனர் கார்த்திக் யோகி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இதற்காக இளையராஜாவை நேரில் சந்தித்து அவர் அந்த பாடலின் அனுமதியைப் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஹிட் பாடலான ’பேர் வச்சாலும் வச்சாலும்’ பாடலை யுவன் சங்கர் ராஜா எப்படி ரீமேக் செய்திருக்கிறார் என்பதை டிக்கிலோனா’ திரைப்படம் வெளி வந்ததும் பார்ப்போம்