1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (11:11 IST)

வேண்டுமென்றே சுமாரான பாடல்களைப் போட்டுக்கொடுத்த இளையராஜா! காரணம் ரஹ்மானா?

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குனரும் வசனகர்த்தாவுமான லியாகத் அலிகான் கட்டளை என்ற படத்தில் இளையராஜாவுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும் ஆஸ்தான வசனகர்த்தாவுமான லியாகத் அலிகான் சமீபத்தில் சித்ரா லட்சுமணின் டூரிங் டாக்கிஸ் இணையச்சேனலுக்கு ஒரு நேர்காணல் அளித்திருந்தார். அதில் அவர் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கூறியிருந்தார். அதில் இளையராஜா தன்னுடைய கட்டளை படத்துக்கு சிறப்பாக இசையமைத்துத் தரவில்லை என்று கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

அந்த பேட்டியில் அவர் ‘நான் கட்டளை படத்துக்கு முதலில் ரஹ்மானிடம் அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். ஆனால் விஜயகாந்த் இளையராஜாவையே புக் செய்ய சொன்னார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றாலும் என்னை வளர்த்துவிட்டவர் என்பதால் அவர் சொல்லை என்னால் மீறமுடியவில்லை.  இதனால் ரஹ்மானிடம் அட்வான்ஸை வாங்கி, இளையராஜாவை புக் செய்தேன்.

அந்த படத்துக்கு இளையராஜா அமைத்துக் கொடுத்த பாடல்கள் எல்லாம் ரொம்பவும் சுமாராக இருந்தது. அதிலும் ஒரு பாடல் மிகவும் சுமாராக இருந்ததால் தயாரிப்பாளர்களே செலவானாலும் பரவாயில்லை வேறு பாடல் கேளுங்கள் என சொல்லிவிட்டனர். வேறு பாடல் வாங்கி வந்தால் அது முதல் பாடலை விட மோசமாக இருந்தது. அதுபோல பின்னணி இசையையும் இளையராஜா ஏனோ தானோவென்று செய்து கொடுத்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

பின்னர் ஒருநாள் செல்வமணி என்னிடம் கங்கை அமரனும், இளையராஜாவும் பேசிய ஒரு உரையாடல் குறித்து சொன்னார். அப்போது கங்கை அமரன் ‘அண்ணா என்ன இருந்தாலும் அவர் மீண்டும் நம்மிடம் வந்துவிட்டார் அல்லவா. அதனால் அவருக்கு நல்ல பாடல்களை போட்டுக்கொடு என்று ஆதங்கப்பட்டார்’ என என்னிடம் சொன்னார். இதன் பிறகு எனக்கு ஒன்று புரிந்தது. ஒரு வேளை நாம் ரஹ்மானிடம் முதலில் சென்றதால்தான் இளையராஜா இப்படி செய்தாரோ என நினைத்தேன். ‘ எனக் கூறியுள்ளார்.