திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 22 ஆகஸ்ட் 2020 (10:49 IST)

அந்தாதூன் ரீமேக்கில் கார்த்திக்- கலக்கலான காம்பினேஷன்!

அந்தாதூன் ரீமேக்கில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திக் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதும் அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் இப்போது அந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்ல்ப்படுகிறது. கதைப்படி கார்த்திக்கின் கதாபாத்திரம் ஒரு ஓய்வு பெற்ற நடிகராகவே வருவதாக அமைக்கப்பட்டுள்ளதாம்.