திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (15:26 IST)

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசா!

கடந்த 2019-ம் ஆண்டு முதல் விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இதையடுத்து இப்போது இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களுக்கு கோல்டன் விசா எனும் சிறப்பு விசாவை வழங்கி வருகிறது. இந்த விசாவைப் பெறுபவர்கள் 10 ஆண்டுகள் எப்போது வேண்டுமானாலும் துபாய்க்கு சென்றுவரலாம். வேறு எந்த விசாவும் எடுக்க தேவையில்லை.

இந்த விசா இப்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த சினிமாக் கலைஞர்கள் பலருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் மலையாளம் மொழிகளின் திரைக்கலைஞர்களுக்கு அதிகளவில் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இப்போது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இணைந்துள்ளார். அவருக்கு சமீபத்தில் கோல்டன் விசா கொடுக்கப்பட்டுள்ளது.