1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : திங்கள், 5 மார்ச் 2018 (22:33 IST)

தனுஷ் படம் போல சூர்யா படமும் இருக்கும் – யுவன் சங்கர் ராஜா

‘தனுஷின் ‘புதுப்பேட்டை’ லெவலுக்கு சூர்யாவின் 36வது படம் இருக்கும்’ என யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

 
சூர்யாவின் 36வது படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸாக இருக்கிறது.
 
இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். “செல்வராகவனும், நானும் இணைந்தால் அந்தப் படம் நெருப்பு மாதிரி இருக்கும். இந்த முறை சூர்யாவுக்காக இணைந்து பணியாற்றியிருக்கிறோம். இசை அருமையாக வந்திருக்கிறது. தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ படம் எப்படி இன்றளவும் பேசப்படுகிறதோ, அதுபோல எப்போதும் பேசப்படும் மிகச்சிறந்த படமாக இது இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.